Search
Tuesday 20 November 2018
  • :
  • :

பாஃப்டா தனஞ்செயன் செய்த உதவி..

பாஃப்டா தனஞ்செயன் செய்த உதவி..

லட்சுமி என்ற சர்ச்சைக்குரிய குறும்படத்தை இயக்கியவர் சர்ஜுன். இவரது இயக்கத்தில் சத்யராஜ், வரலட்சுமி சரத்குமார், கிஷோர் நடித்துள்ள படம் ‘எச்சரிக்கை, இது மனிதர்கள் நடமாடும் இடம்’.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்காப்பி ரெடியாகி சென்சார் செய்யப்பட்டநிலையில் மாதக்கணக்கில் கிடப்பில் கிடந்தது.

இதையறிந்த பாஃப்டா தனஞ்செயன் ‘எச்சரிக்கை, இது மனிதர்கள் நடமாடும் இடம்’.

படத்தை வாங்கி தமிழ்கம் முழுக்க வெளியிட திட்டமிட்டிருந்தார்.

இதற்கிடையில் அவரே தயாரித்து வெளியிட்ட மிஸ்டர்.சந்திரமௌலி நஷ்டத்தை ஏற்படுத்தியதால், ‘எச்சரிக்கை, இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தை தன்னால் வெளியிட இயலாது என தெரிவித்துவிட்டார் தனஞ்செயன்.

எப்படியாவது இந்தப்படத்தை இம்மாதம் வெளியிட்டே தீர வேண்டும் என்ற நெருக்கடி காரணமாக, இந்த படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை வேறு ஒரு விநியோகஸ்தரிடம் கொடுத்துவிட்டார் தயாரிப்பாளர்.

தனஞ்செயன் கொடுத்த ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸை படம் வெளியாகும்போது திருப்பிக்கொடுப்பதாக உறுதியளித்துள்ளார் தயாரிப்பாளர். அதை ஏற்றுக்கொண்ட தனஞ்செயன் ‘எச்சரிக்கை, இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தை வேறு விநியோகஸ்தரிடம் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தை 24-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better