Search
Thursday 13 December 2018
  • :
  • :

கவலை வேண்டாம் படத்தை காலி பண்ண போட்டோபோட்டி…

கவலை வேண்டாம் படத்தை காலி பண்ண போட்டோபோட்டி…

பழைய கதைதான், ஆனால் புதிய கதைக்கு இந்த சம்பவம்தான் அடிப்படையான காரணம்.

ஜீவா நடிக்கும் கவலை வேண்டாம் படத்தை ஆரம்பித்த சில நாட்களிலேயே இயக்குநர் டீகேவுக்கும், தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கும் முட்டிக்கொண்டுவிட்டது.

இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக  படத்தை ட்ராப் பண்ணுகிற சூழல் ஏற்பட்டது – அப்போது.

இந்தப் படத்தை நான் டைரக்ட் பண்ணவில்லை என்ற தகவலை சோஷியல்மீடியாவில் பகிர்ந்தார் இயக்குநர் டீகே.

இதே தயாரிப்பாளரின் தயாரிப்பில் ஜீவா நடித்த யான் படம் ஓடாமல்போய், தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு 10 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது.

அந்த நஷ்டத்துக்கு ஈடாக நயாபைசா வாங்காமல் ஜீவா இலவசமாக நடித்துக் கொடுக்க முன் வந்த படம்தான் – கவலை வேண்டாம்.

இயக்குநர் டீகேவுக்கும், தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கும் தகராறு ஏற்பட்டதால், ஜீவாவின் ஓசி கால்ஷீட்டில் எடுக்கும் படத்தை உருப்படியாக எடுத்து முடிக்க முடியாத அளவுக்கு சிக்கல் ஏற்பட்டது.

பின்னர் ஜீவா தலையிட்டு  இருவரையும் சமாதானப்படுத்தி வைத்தார்.

அதன் பிறகு ஒருவழியாய் இருவருக்குமான பிரச்சனை அடங்கிப்போனது.

அப்போதைக்கு எல்ரெட் குமார் அடங்கிப்போனாலும், டீகே மீதான அவரது கோபம் அடங்கவில்லை.

சமயம் வரட்டும் என்று காத்திருந்த எல்ரெட் குமார், படம் ரிலீஸ் ஆக இருக்கும் இந்த நேரத்தில் தன் கோபத்தை வெளிக்காட்டிவிட்டார்.

தன்னுடைய கோபம், இயக்குநர் டீகேயின் எதிர்காலத்தை காலி பண்ணிவிடும் என்று கணக்குப்போட்டு, கவலை வேண்டாம் படம் இந்த வாரம் வெளியாக உள்ளநிலையில் அந்தப் படத்துக்கு பப்ளிசிட்டி செய்யும் விஷயத்தில் கையைக்கட்டிக்கொண்டு அமைதியாகிவிட்டார்.

அதன் காரணமாக கவலை வேண்டாம் படம் இந்த வாரம் ரிலீஸ் ஆக இருப்பதேவெளியே தெரியாமல்போய்விட்டது.

சம்பளம் வாங்காமல் ஜீவா ஓசியில் நடித்துக் கொடுத்ததால், கவலை வேண்டாம் படத்தின் பட்ஜெட் மிகவும் குறைவுதான்.

எனவே எவ்வளவு வசூல் ஆனாலும் தனக்கு லாபம்தான் என்ற எண்ணத்தில் கவலை வேண்டாம் படத்துக்கு  பப்ளிசிட்டி பண்ணாமல்  அடக்கிவாசித்துவிட்டார் எல்ரெட் குமார்.

இவர் இப்படி என்றால், இயக்குநர் டீகேயோ கவலை வேண்டாம் படத்தை மிக சுமாரான படமாக சுருட்டிக் கொடுத்துவிட்டாராம்.

இதன் மூலம் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரை பழிவாங்கிவிட்ட சந்தோஷத்தில் திளைக்கிறாராம்.

என்ன மனுஷங்கய்யா இவங்க?




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better