Search
Saturday 20 January 2018
  • :
  • :

தீபாவளி பந்தயத்தில் சரத்குமார் படம்…

தீபாவளி பந்தயத்தில் சரத்குமார் படம்…

தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட கொடி வீரன் படம் வெளியாகவில்லை. மெர்சல் படத்தின் நிலவரமும் இன்னும் உறுதியற்றதாகவே உள்ளது.

இதை பயன்படுத்தி சரத்குமார் நடிக்கும் ’சென்னையில் ஒரு நாள்-2’ படத்தை தீபாவளி ரிலீசாக வெளியிட உள்ளனர்.

கடந்த மாதம் 15-ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக சொல்லப்பட்டு பிறகு ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட படம் இது.

’சென்னையில் ஒரு நாள்-2’ படம் தீபாவளி ரிலீசாக திரைக்கு வரவிருப்பதை படக்குழுவினர் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படம் வெளியாகவாய்ப்பில்லை என்ற நம்பிக்கையில் ஏற்கெனவே கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், வைபவ் நடித்துள்ள ‘மேயாத மான்’ படம் தீபாவளி வெளியீடாக வரவிருக்கும் நிலையில் இப்போது ‘சென்னையில் ஒரு நாள்-2’ படமும் வெளியாகவிருக்கிறது.

அறிமுக இயக்குனர் ஜே.பி.ஆர்.இயக்கியுள்ள ‘சென்னையில் ஒரு நாள்-2’ படத்தில் சரத்குமாருடன் அஞ்சனா பிரேம், சுஹாசினி, நெப்போலியன் முனிஸ்காந்த் முதலானோர் நடித்திருக்கிறார்கள்.

மெர்சல் வெளிவராமல்போனால் இந்த தீபாவளிக்கு மேலும் சில படங்கள் வெளியாக வாய்ப்பிருக்கிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better