Search
Tuesday 13 November 2018
  • :
  • :

செக்கச்சிவந்த வானம் – தொழிற்சங்கம் சம்மந்தப்பட்ட கதையா…?

செக்கச்சிவந்த வானம் – தொழிற்சங்கம் சம்மந்தப்பட்ட கதையா…?

காற்று வெளியிடை படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கும் படத்துக்கு ‘செக்கச்சிவந்த வானம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப்படத்தில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அவருக்குப் பதிலாக அருண் விஜய் நடிக்கிறார்.

அவர் மட்டுமல்ல, பிரகாஷ் ராஜ், தியாகராஜன் ஆகியோரும் இப்படத்தில் இணைந்துள்ளார்கள்.

இவர்களுடன் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி சிம்பு, அர்விந்த் சாமி, விஜய்சேதுபதி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவுக்கு சந்தோஷ் சிவன், எடிட்டிங்கிற்கு ஸ்ரீகர் பிரசாத் கூட்டணி அமைத்துள்ளனர்.

பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். திலீப் சுப்பராயன் இப்படத்திற்கு ஸ்டன்ட் பணிகளை கவனிக்கிறார்.

மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரித்து நெகட்டிவ் ரைட்ஸை, லைகாவுக்கு விற்றுள்ளார்.

இப்படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கு ‘நவாப்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

செக்கச்சிவந்த வானம் படத்தின் கதை தொழிற்சங்கம் சம்மந்தப்பட்டது என்ற தகவல் அடிபடுகிறது.

அனேகமாக தொழிற்சாலைகள் அதிகம் கொண்ட வட சென்னைப்பின்னணியில் இப்படத்தின் கதைக்களம் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better