Search
Monday 16 July 2018
  • :
  • :

தமிழ் நாட்டுக்கு படை எடுக்கும் தெலுங்கு ஹீரோக்கள்…!

தமிழ் நாட்டுக்கு படை எடுக்கும் தெலுங்கு ஹீரோக்கள்…!

தமிழ்ப்பட ஹீரோக்கள் நடித்த படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஆந்திராவில் வெளியாகிறது.

விஜய் நடித்த ‘புலி’ படம் வரை இங்குள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள் அங்கு வெளியானாலும் தெலுங்கு ரசிகர்களைப் பொருத்தவரை டப்பிங் படங்கள்தான்.

தெலுங்கு ஹீரோக்கள் நடிக்கும் தெலுங்குப் படங்கள் தமிழில் வெளியாகும் போதும் அதே கதைதான்.

மகேஷ்பாபு நடித்த ‘ஸ்ரீமந்துடு’ படம் தமிழில் ‘செல்வந்தன்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டது.

அப்படத்தின் புரமோஷனுக்காக இசை வெளியீட்டு விழா நடத்தினார்கள். அந்த விழாவுக்கு சென்னை வந்தார் மகேஷ்பாபு.

அப்படியும் செல்வந்தன் படம் ஓடவில்லை.

இந்நிலையில் தற்போது ராம்சரண் தெலுங்கில் நடித்திருக்கும் ‘புருஸ்லீ ’ படமும் தமிழில் டப் செய்யப்படுகிறது.

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் படத்துக்கு ‘புருஸ்லீ ’ என்று பெயர் வைத்திருப்பதால் ராம்சரணின் தெலுங்கு டப்பிங் படத்துக்கு ‘புருஸ்லீ-2’ என்று பெயர் வைத்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 16-ஆம் தேதி காலை சென்னையில் நடைபெறவிருக்கிறது.

இந்த விழாவிற்கு ராம்சரண் சென்னை வருகிறார்.

இவ்விழாவில் படத்தின் நாயகன் ராம்சரண், நாயகி ரகுல்பிரீதி சிங், நதியா, சம்பத் மற்றும் படத்தின் இயக்குநர், இசையமைப்பாளர் என ‘புருஸ்லீ-2’ படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இப்படத்தின் பாடல்கள் 16-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better