Search
Sunday 24 February 2019
  • :
  • :

‘பூமராங்’ படத்துக்கு ‘U’ சான்றிதழ்

‘பூமராங்’ படத்துக்கு ‘U’ சான்றிதழ்

கௌதம் கார்த்திக்கை வைத்து ‘இவன் தந்திரன்’ படத்தைத் தயாரித்து இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பூமராங்.

அதர்வா, மேகா ஆகாஷ் நடித்திருக்கும் இந்தப் படத்தில் இவர்களுடன் உபேன் பட்டேல் சுஹாசினி மணிரத்னம், இந்துஜா, சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு தணிக்கையில் ‘U’ சர்டிஃபிக்கெட் கிடைத்ததை தொடர்ந்து இப்படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார் ஆர்.கண்ணன்.

சில ரிலீஸ் தேதிகளும் குறிக்கப்பட்டு படத்தை வெளியிடும் முயற்சியிலும் இறங்கினார். ஆனால் அந்த தேதிகளில் இப்படம் வெளியாகவில்லை.

இந்தநிலையில் ‘பூமராங்’படத்தை மார்ச் 1-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார் ஆர்.கண்ணன். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை ஆர்.கண்ணன் வெளியிட்டுள்ளார். ‘இமைக்கா நொடிகள்’ படத்திற்கு பிறகு அதர்வா நடிப்பில் வெளியாகும் படம் இது.

இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்த பிறகு மேகா ஆகாஷ் நடிக்க ஒப்புக்கொண்ட ‘பேட்ட’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ ஆகிய படங்கள் பூமராங் படத்துக்கு முன்னரே வெளியாகிவிட்டன.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better