Search
Sunday 16 December 2018
  • :
  • :

BOFTA நடத்திய டிஜிட்டல் சினிமா பட்டறை

BOFTA நடத்திய டிஜிட்டல் சினிமா பட்டறை

பல்வேறு வகையான டிஜிட்டல் சினிமா கேமராக்கள் மற்றும் ஒளியின் முக்கிய கோட்பாடுகளுடன் விரிவுரைகள், செய்முறைகள் மற்றும் நேரடி- பயிற்சி ( ஆங்கில மற்றும் தமிழ் இருமொழிகளிலும்), SICA-வினால் BOFTA திரைப்படக்கல்லூரியில் மார்ச் 10, 2018 அன்று நடைபெற்றது.

சுமார் 70 உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

பொருளாளர் ஆர்.எம்.ராம்நாத் ஷெட்டி, துணை செயலர் ஸ்ரீதர் ஜனார்த்தனன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஏ.கார்த்திக் ராஜா, டி.கன்னன் மற்றும் BOFTA நிறுவனர் தனஞ்சனன் ஆகியோர் முன்னிலையில் இந்த பயிற்சி திட்டம் SICA யின் தலைவர் பி.சி.ஸ்ரீராம், பொதுச்செயலர் B.கண்ணன் துவக்கி வைத்தனர்.

முதன் முதலாக ஒளிப்பதிவாளரும், எழுத்தாளருமான சி.ஜெ. ராஜ்குமார் பயிற்சி வகுப்பெடுத்தார்.

அவரைத்தொடர்ந்து ஒளிப்பதிவாளர். கிச்சாஸ், ஒளிப்பதிவாளர்.

மகேஷ் முத்துசாமி, விரிவுரையாளர் கௌரி சங்கர், மற்றும் விரிவுரையாளர் நாரயனண் குமார் அவர்களும் பயிற்சி வகுப்பெடுத்தனர்.

10 வகையான உயர் வகை தொழில்நுட்பம் கொண்ட சினிமா கேமராக்கள் மற்றும் உயர்வகை தொழில்நுட்பம் கொண்ட DSLR வகை கேமராக்களும் பயன்படுத்தப்பட்டன.

நேரடி- பயிற்சியில் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள்:

Red Epic/Dragon

Arri Alexa XT

Black magic ursa mini pro 4.6k (NAB Award Winner)

Sony A7SII

Pansaonic Varicam

Panasonic EVA-1

Panasonic GH5 & GH5S

இவற்றுடன் Carl Ziess மற்றும் Sigma சினிமா லென்ஸ்கள் பயன்படுத்தப்பட்டன .

கிச்சாஸ், சி.ஜெ. ராஜ்குமார், மகேஷ் முத்துசாமி, நாரயனண் குமார், கௌரி சங்கர் ஆகியோர் செயல் விளக்கம் அளித்தார்கள்.

இது போன்று பல்வேறு பயிற்சி பட்டறைகளை நடத்துவதற்காக SICA-வுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, அதன் உறுப்பினர்களுக்கு நன்மை பயக்கும் பணியை மேற்கொள்வதற்கு ஒப்புக் கொண்ட SICA யின் தலைவர் பி.சி.ஸ்ரீராம் முன்னிலையில், அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பூர்த்தி செய்யப்பட்ட SICA சான்றிதழ் எடிட்டர் பி.லெனினால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஏற்பாடு செய்வதற்கான SICA குழுவின் உறுப்பினர்களுக்கு பொதுச் செயலாளர் பி.கண்ணன் இடமளித்து உதவிய BOFTA திரைப்படக்கல்லூரியின் நிறுவனர் தனஞ்ஜெயனுக்கும், ஆனந்த் சினி சர்வீஸ், Anand cine service, Adnt Ratna , Panasonic, Carl Zeiss ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better