Search
Tuesday 24 April 2018
  • :
  • :

பாபிசிம்ஹாவை கொந்தளிக்க வைத்த ஹீரோ

பாபிசிம்ஹாவை கொந்தளிக்க வைத்த ஹீரோ

தென்மேற்கு பருவக்காற்று, நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் படங்களில் நடித்த காலத்தில் சம்பாதித்த நல்லபேரை கொஞ்சம் கொஞ்சமாக காலி பண்ணிக் கொண்டு வருகிறார் விஜய் சேதுபதி.

அவரது வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கும் மீடியாக்களின் அதிருப்தியை சம்பாதித்த விஜய்சேதுபதி, தற்போது சக நட்சத்திரங்களிடமும் கெட்ட பெயரை சம்பாதித்து வருவதுதான் கொடுமை.

முக்கியமாக விஜய்சேதுபதியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டால் போனை எடுக்கவே மாட்டார்.

யார் தொடர்பு கொண்டார்களோ… அந்த நம்பருக்கு வேறு நம்பரிலிருந்து ஒருவர் பேசுவார்.

நீங்கள் யார்? எதற்காக விஜய் சேதுபதியிடம் பேச வேண்டும்? என்ன பேச வேண்டும்? என்று ஏகப்பட்ட கேள்விகள் கேட்பார்.

நீங்க யாரு என்று கேட்டால் நான் அவருடைய மானேஜர் என்பார்.

சற்று நேரத்தில் இன்னொரு நம்பரிலிருந்து வேறு ஒருவர் லைனில் வருவார்.

அவரும் தன் பங்குக்கு சில கேள்விகள் கேட்பார்.

பிறகு இன்னொருவர்…. இன்னொருவர்… என்று சுமார் ஏழெட்டு நபர்கள் குறுக்குவிசாரணை செய்த பிறகு அடுத்த நாள் லைனுக்கு வருவாராம் விஜய்சேதுபதி.

அதுவும் தன்னுடைய நம்பரிலிருந்து பேசாமல், தன்னுடைய நண்பருடைய நம்பரில் பேசுவாராம்.

முன்னணி பத்திரிகையின் நிருபர்கள் பலருக்கும் ஏற்பட்ட இந்த அனுபவம் சமீபகாலமாக சக நடிகர்களுக்கும் ஏற்பட்டு வருகிறது.

விஜய்சேதுபதியின் இந்த நடவடிக்கையில் நொந்துபோன பாபிசிம்ஹா சில தினங்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சிப்பேட்டியில் தன் மனக்குமுறலை வெளிப்படையாகவே கொட்டித்தீர்த்தார்.

சக நடிகர்கள் யாராவது மாற வேண்டும் என்றால்… யாரை சொல்வீர்கள்?

நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்ட இந்த கேள்விக்கு, சற்றும் யோசிக்காமல் பாபி சிம்ஹா குறிப்பிட்டது விஜய்சேதுபதியின் பெயரைத்தான்.

போன் செய்தால் எடுப்பதே இல்லை என்று குற்றம்சாட்டி வருத்தப்பட்டார் பாபிசிம்ஹா.

சினிமாவுல நடிக்கிறது முக்கியமில்லை விஜய் சேதுபதி…. வாழ்க்கையில நல்ல மாதிரி நடக்கணும்…..




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better