Search
Sunday 16 December 2018
  • :
  • :

மீண்டும் சறுக்கலில் பாபிசிம்ஹா

மீண்டும் சறுக்கலில் பாபிசிம்ஹா

வில்லன் நடிகரான பாபி சிம்ஹாவுக்கு சினிமாவில் சீக்கிரமே வெற்றி கிடைத்தது. அதுமட்டுமல்ல, தேசிய விருதும் கிடைத்தது.

எல்லாமே குறுகியகாலத்திலேயே கிடைத்ததினாலோ என்னவோ தலைக்கனமும் வந்து சேர்ந்தது.

அதன் காரணமாக இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என் அனைவரிடமும் தெனாவெட்டாக நடந்து கொண்ட பாபிசிம்ஹா, மீடியாக்களிடமும் திமிராக நடந்துகொண்டார்.

அதனால் சீக்கிரமே அவரது சினிமாவாழ்க்கை சரிவடையத் தொடங்கியது.

ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தநிலையிலேயே மீண்டும் வில்லனாக நடிக்கும்நிலைக்குத்தள்ளப்பட்டார் பாபிசிம்ஹா.

கருப்பன் படத்தில் வில்லனாக நடித்தவர் தற்போது ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் ’சாமி 2’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

‘கம்மர சம்பவம்’ என்ற மலையாளப் படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார்.

அவருடைய கேரியரில் தற்போது மேலும் ஒரு சறுக்கல்.

புதிதாகத் தொடங்க இருக்கும் வெப் சீரியலில் நடிக்கிறார்.

‘ஜிகர்தண்டா’ படத்தைப் போல பயங்கர வில்லன் கேரக்டராம் அவருக்கு.

‘சவாரி’ படத்தை இயக்கிய குகன் சென்னியப்பன் இந்த வெப் சீரியலை இயக்குகிறார்.

‘சவாரி’ படத்துக்குப் பிறகு அவர் இயக்கும் சீரியல் இது. பிளாக் ஹியூமர் நிறைந்த சீரியலாக இது தயாராகிறது.

பாபி சிம்ஹா ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இந்த வெப் சீரியலை தயாரிக்கின்றனர்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better