Search
Tuesday 25 September 2018
  • :
  • :

பொங்கல் ரிலீஸ் ஆர்.கே.சுரேஷின் ‘பில்லா பாண்டி’

பொங்கல் ரிலீஸ் ஆர்.கே.சுரேஷின் ‘பில்லா பாண்டி’

விநியோகஸ்தராக இருந்த ஆர்.கே.சுரேஷை தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக நடிக்க வைத்தார் பாலா.

அந்தப் படத்தையடுத்து இப்படை வெல்லும், தனி முகம், ஸ்கெட்ச், வேட்டை நாய், பில்லா பாண்டி என பல படங்களில் நடித்து வருகிறார் ஆர்.கே.சுரேஷ்.

இவற்றில் சரவண சக்தி இயக்கத்தில் உருவாகும் படமான ‘பில்லா பாண்டி’யில் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த படத்தில் அஜித் ரசிகராக நடிக்கும் ஆர்.கே.சுரேஷ் ஜோடியாக, ‘மேயாத மான்’ படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜா நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இன்னும் சில வாரங்களில் போஸ்ட்புரடக்ஷன்ஸ் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

திட்டமிட்டபடி பட பணிகள் முடிந்தால் பில்லா பாண்டி படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்.

பொங்கலுக்கு சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ வெளியாகிறது.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் டிசம்பர் மாதம் வராத பட்சம் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பிருக்கிறது.

இந்தப் படங்களோடு, விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘மன்னர் வகையறா’ படம் பொங்கலுக்கு வருவதாக ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில்தான் ஆர்.கே.சுரேஷின் ‘பில்லா பாண்டி’யும் பொங்கல் ரேசில் களமிறங்கவிருப்பதை அறிவித்திருக்கிறார்கள்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better