Search
Saturday 20 October 2018
  • :
  • :

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தேடி வந்த வாய்ப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தேடி வந்த வாய்ப்பு

அருள்நிதி நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளியான தகராறு படத்துக்கு முதலில் பகல்கொள்ளை என்று பெயர் வைத்தபோது, இந்த டைட்டில் வச்சால் எங்க குடும்பத்தையே திட்டுவாங்க என்று வேறு டைட்டில் வைக்க சொன்னவர். மற்றொரு படத்துக்கு திருட்டுரயில் என்று வைத்தபோது என் தாத்தாவை திட்டுவாங்க என்று நடிக்க மறுத்தார்.

அப்படிப்பட்ட அருள்நிதி தற்போது கரு பழனியப்பன் இயக்கும் ‘புகழேந்தி எனும் நான்’ என்ற அரசியல் படத்தில் நடிக்கிறார்.

முழுக்க முழுக்க அரசியல் களத்தை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்கிறார் பிந்து மாதவி.

ஒரு டஜன் படங்களில் கதாநாயகியாக நடித்தாலும் பிந்துமாதவிக்கு பெரிய பிரேக் கிடைக்கவில்லை. அவரைச்சுற்றி பின்னப்பட்ட மாயவலைக்குள் சிக்கியதால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அவரைத் தேடி பல பட வாய்ப்புகள் வந்தாலும், நல்ல கதைக்காகக் காத்திருந்தார்.

இந்த நேரத்தில்தான் கரு.பழயனிப்பனின் படத்தின் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு பிந்து மாதவியைத் தேடி வந்துள்ளது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better