Search
Monday 17 December 2018
  • :
  • :

பாலாவின் அடுத்த படம்

பாலாவின் அடுத்த படம்

தான் இயக்கும் படங்களை தயாரித்து வரும் பாலா, ஏற்கனவே பி.வாசுவை இயக்குநராக வைத்து அஜித் நடித்த பரமசிவன் படத்தை தயாரித்தார். அதற்கு முன் சூர்யா நடித்த மாயாவி படத்தை தயாரித்தார்.

இந்த வரிசையில் லென்ஸ் பட இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கிறார்.

‘லென்ஸ்’ திரைப்படம் ஆங்கிலம், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியானது.

அந்தப்படத்தை தமிழில் இயக்குநர் வெற்றிமாறன் வாங்கி வெளியிட்டார்.

இந்நிலையில் அடுத்தப் படத்தின் திரைக்கதையை எழுதி முடித்த ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் பாலாவிடம் கதை சொல்லி இருக்கிறார்.

கதையைக் கேட்ட இயக்குநர் பாலா தனது ‘பி ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

விரைவில் தொடங்கப்பட உள்ள இப்படம் குறித்தும் நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பும் வெளியாக இருக்கிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better