Search
Monday 17 December 2018
  • :
  • :

2.0 போலவே ‘பாகுபலி-2’

2.0 போலவே ‘பாகுபலி-2’

தற்போது தயாரிப்பில் இருக்கும் தென்னிந்திய திரைப்படங்களில் இன்றைய தேதியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இரண்டு படங்களுக்கு மட்டுமே.

ஒன்று… ரஜினி நடிக்க ஷங்கர் இயக்கும் 2.0 படம்.

இரண்டு… ராஜமௌலி இயக்கும் பாகுபலி-2 படம்.

ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் உருவான  பாகுபலி படத்தின் முதல் பாகம் வெளியாகி வசூலில் பெரும் சாதனை படைத்தது.

இதனால் ‘பாகுபலி-2’ படத்துக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக தயாரிப்பில் இருக்கும் இந்த படத்தை அடுத்த மாதம் (ஏப்ரல்) 28-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் பாகுபலி -2 படத்தின் டிரைலரை இம்மாதம் 15-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்த டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது.

மும்பையில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில் ‘பாகுபலி-2’ பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் வெளியிடவிருக்கிறார்.

2.0 படத்தின் ஹிந்தி ரைட்ஸை பெரிய விலைக்கும் விற்க வேண்டும் என்ற திட்டத்தோடு, அப்படத்தின்  ஃபர்ஸ்ட்லுக்கை மும்பையில் வெளியிட்டனர்.

அதே வழியில்தான் தற்போது பாகுபலி-2 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவை முப்பையில் நடத்துகின்றனர்.

டிரைலர் வெளியீட்டை தொடர்ந்து படத்தின் பாடல்களை இந்த மாத இறுதியில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் மிக பிரம்மாண்டமான விழாவில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better