Search
Tuesday 19 December 2017
  • :
  • :

15 கோடி லாபம் தந்த பாகுபலி படத்தின் தமிழ் டப்பிங்…!

15 கோடி லாபம் தந்த பாகுபலி படத்தின் தமிழ் டப்பிங்…!

சமீபத்தில் வெளியான ‘பாகுபலி’ தெலுங்குப்படம் உலகம் முழுக்க வசூலில் சாதனை படைத்து வருகிறது.
இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட இப்படத்தின் பட்ஜெட் 250 கோடி.
முதல் பாகத்திற்கான பட்ஜெட் 125 கோடி.
இந்திய சினிமாவைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவான படம் என்பதே ‘பாகுபலி’ படத்துக்கு பப்ளிசிட்டியாக  அமைந்தது.
அதுவே மிகப்பெரிய ஓபனிங் கிடைக்கவும் காரணமானது.
இந்த படம் வசூலில் பெரிய சாதனை படைக்கவும் காரணமாக அமைந்தது.
இப்படம் வெளியாகி ஒரே வாரத்தில் 265 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல்.
இதுவரை தென்னிந்திய சினிமாவில் வெளியான எந்த ஒரு படமும் இவ்வளவு வசூலை அள்ளியது இல்லை என்று சொல்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
நேரடி தமிழ்ப்படம் என்ற பெயரில், தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட ‘பாகுபலி’ படத்தை ‘ஸ்டுடியோ க்ரீன்’ கே.ஈ. ஞானவேல்ராஜா வாங்கி தமிழகம் முழுக்க வெளியிட்டார்.
தமிழ் டப்பிங் மட்டுமே இதுவரை சுமார் 35 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறதாம்.
இப்படத்தை வெளியிட்ட ஞானவேல்ராஜாவுக்கு சுமார் 15 கோடிக்கு மேல் லாபம் கிடைத்திருக்கிருப்பதாக சொல்லப்படுகிறது.
சூர்யா நடித்த ‘மாஸ்’ படம் படு தோல்வியடைந்ததினால் 10 கோடிக்கு மேல் நஷ்டப்பட்டிருந்தார் ஞானவேல் ராஜா.
தற்போது ‘பாகுபலி’ பெரும் லாபத்தைக் கொடுத்து அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
‘பாகுபலி’ படத்தின் வெற்றியைக் கொண்டாடும் சக்சஸ் மீட் அண்மையில் நடைபெற்றது.
‘பாகுபலி’யாக நடித்த தெலுங்கு நடிகர் பிரபாஸ், இதற்காக ஆந்திராவிலிருந்து வந்திருந்தார்.
‘பாகுபலி’ படத்தின் வெற்றிக்கு உறுதுணை புரிந்த ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
‘பாகுபலி’ படத்திற்காக கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் உழைத்தேன். இப்போது இந்திய அளவில் எனக்கு பெரும் புகழ் கிடைத்துள்ளது. இதற்கு காரணம் இயக்குனர் ராஜமௌலிதான். அவருக்கு நான் வாழ் நாள் முழுக்க நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோவை போன்றதொரு முக்கியமான கேரக்டரில் சத்யராஜ் நடித்துள்ளார்.
ஒரு காட்சியில் அவரது தலையில் நான் கால் வைத்தபடி நடிக்க வேண்டும் என்று டைரக்டர் ராஜமௌலி சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டதும் எனக்கு ஷாக். காரணம் அவர் மிகப் பெரிய ஒரு நடிகர். சீனியர் நடிகரான அவர் ஒரு தெலுங்கு படத்தில் எனக்கு அப்பாவாக கூட நடித்திருக்கிறார். அப்படிப்பட்ட சத்யராஜ் தலையில் நான் காலை வைத்து நடிப்பதா? என்று ராஜமௌலியிடம் தயங்கினேன். ஆனால் நான் தயங்கிய விஷயத்தைக் கேட்ட சத்யராஜ், ‘காட்சிக்கு தேவை என்றால் அப்படி நடிப்பதில் எந்த தப்பும் இல்லை! தைரியமாக நடியுங்கள்’ என்று சொல்லி எனது தயக்கத்தை போக்கினார். அதனால்தான் அந்த காட்சியில் என்னால் சிறப்பாக நடிக்க முடிந்தது.
இந்த படம் எனக்கு தமிழில் தந்துள்ள வரவேற்பை பார்க்கும்போது தமிழ் படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை பிறந்துள்ளது.
நல்ல வாய்ப்புகள் வந்தால் தமிழ்ப் படங்களிலும் நடிப்பேன்.
அடுத்த ஆண்டு ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரவிருக்கிறது.
அந்த பாகத்தின் 40 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது.
இனி 60 சதவிகித படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. செப்டம்பர் மாதம் மீதி காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கி விடும்” என்று சொன்னார் பிரபாஸ்.



Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better