Search
Sunday 23 September 2018
  • :
  • :

பாகுபலி- 2, சீமராஜா… இப்படி ஒரு பில்டப் தேவையா…?

பாகுபலி- 2, சீமராஜா… இப்படி ஒரு பில்டப் தேவையா…?

தமிழ்சினிமா வரலாற்றில் அதிக வசூல் சாதனை செய்த படம் என்றால் பாகுபலி- 2 படம்தான்.

இப்படம் தமிழகத்தில் சுமார் 150 கோடியை வசூலித்து விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் தலா 72 கோடி ஷேர் கொடுத்தது.

அதற்கு அடுத்து தமிழகத்தில் வசூல் சாதனை செய்த படம் மெர்சல். 120 கோடி வசூலித்து 60 கோடி ஷேர் கொடுத்தது.

இந்நிலையில், பொன் ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சீமராஜா’ படத்தில் 14 ஆம் நூற்றாண்டில் நடக்கும் காட்சிகள் 15 நிமிடங்கள் இடம்பெறுகின்றன.

இந்தப் படத்தில் இடம்பெறும் பீரியட் காட்சிகளை ட்ரெய்லரில் பார்த்துவிட்டு சமூக வலைதளங்களில் மக்கள் கிண்டல் பண்ணினார்கள்.

மக்களின் மனநிலைக்கு மாறாக, சீமராஜா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், “இந்த ட்ரெய்லரின் கடைசி 3 ஷாட் பார்த்து, ‘பாகுபலி மாதிரி இருக்கு’ என சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்தன. அது எங்களுக்கு, எங்கள் உழைப்புக்கு கிடைத்த பெருமை.” என்று பேசினார் சிவகார்த்திகேயன்.

இதன் தொடர்ச்சியாக சீமராஜா படத்தின் முதல்நாள் வசூல் பாகுபலி- 2 படத்தின் முதல்நாள் வசூலைவிட அதிகம் என்று செய்தியை பரப்பி வருகின்றனர்.

படத்துக்கு பில்ட்அப் கொடுக்க வேண்டியதுதான்… அதுக்காக இப்படியா?




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better