Search
Saturday 20 October 2018
  • :
  • :

பாட்ஷா-2 படத்தில் அஜித்?

பாட்ஷா-2 படத்தில் அஜித்?

ரஜினி எந்தப் படத்தில் நடிக்கப்போகிறார் என்பதை அவரே சொன்னால்தான் உண்மை.
அதுவரை வெளியாகும் தகவல்கள் எல்லாமே வதந்தி அல்லது பொய்.
‘லிங்கா’ படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் படம் எது? என்ற கேள்வி சில மாதங்களாக நீடித்து வந்தது.
இதற்கான விடை மிக சமீபத்தில்தான் கிடைத்தது.
கலைப்புலி தாணு தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார் என்ற செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பா.ரஞ்சித் இயக்கும் படமே இன்னும் தொடங்கப்படவில்லை.
அதற்குள் இப்படத்தை அடுத்து ஷங்கர் இயக்கத்தில் ‘ரோபோ’ படத்தில் அதாவது ‘எந்திரன்’ படத்தின் பார்ட் -2வில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாக ஆரம்பித்தது.
‘கத்தி’ படத்தைத் தயாரித்த லைகா மொபைல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கமல் வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது.
பிறகு விக்ரம் வில்லனாக நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டநிலையில், கடந்த சில தினங்களாக ‘ரோபோ’ படமே கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் ரஜினியின் அடுத்தப் படம் குறித்த பட்டியலில் இன்னொரு படத்தின் பெயரும் அடிபட ஆரம்பித்திருக்கிறது.
ரஜினி நடித்து மாபெரும் வெற்றியடைந்த ‘பாட்ஷா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார் என்பதே அது.
உறுதிப்படுத்தப்படாத இந்தத் தகவல் வெளியான சில வாரங்களுக்குப் பிறகு அதற்கு நேர்மாறாக இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.
அதாவது, ‘பாட்ஷா – 2’  கதையை கதையைக் கேட்ட ரஜினி, ‘பாட்ஷா படத்தில் இருந்த ஸ்கிரீன்பிளே 2 ஆம் பாகத்தில் இல்லை என்று சொல்லி அந்தக்கதையை நிராகரித்துவிட்டாராம்.
‘பாட்ஷா-2’ படத்தில் ரஜினி நிச்சயம் நடிப்பார் என்ற நம்பிக்கையில் இருந்த சுரேஷ்கிருஷ்ணா, ரஜினி  நடிக்க  மறுத்து விட்டதால் அப்ஸெட்டாகி விட்டாராம்.
ஒருவழியாக ஏமாற்றத்திலிருந்து மீண்ட சுரேஷ்கிருஷ்ணா  அஜீத்தை அணுகி ‘பாட்ஷா-2’ கதையைச் சொன்னதாகவும் அவர் சொன்ன கதை அஜித்துக்கு பிடித்து விட்டதாகவும் தற்போது படத்துறையில் பரபரப்பான  தகவல் அடிபடுகிறது.
இந்த செய்தி உண்மையா? அஜித் வாய் திறந்தால்தான் தெரியும்.
நடக்கிற காரியமா இது?



Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better