Search
Tuesday 19 December 2017
  • :
  • :

ஞானேவேல்ராஜா போட்ட தப்பு கணக்கு…!

ஞானேவேல்ராஜா போட்ட தப்பு கணக்கு…!

திரைப்படத்தின் வெற்றி தோல்வியை யாராலும் கணிக்க முடியாதுதான்.

அந்த சூத்திரம் தெரியாமல்தான் திரைப்படத்துறையினர் திணறிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் படம் எங்கே ஓடப்போகிறது என்று நினைத்து குறைந்தவிலைக்கு படத்தை விற்றிருப்பார் தயாரிப்பாளர்.

அந்தப் படம் யாருமே எதிர்பார்க்காதவகையில் வசூலில் சக்கைப்போடு போடும்.

கடந்தகாலங்களில் வசூல் சாதனை படைத்த ‘சின்னதம்பி’, ‘கரகாட்டக்காரன்’, ‘திருடா திருடி’ போன்ற பல படங்கள் இப்படித்தான்.

சின்ன விலைக்கு விற்கப்பட்ட இந்தப் படங்கள் வாங்கிய விலையை விட பல மடங்கு வசூலைக்குவித்தது.

அண்மையில் வெளியான படங்களில் வசூலில் சக்கைப்போடுபோட்ட படம் என்றால் ‘பாகுபலி’ படம்தான்.

தெலுங்கில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை தமிழில் வெளியிட வேண்டும் என்ற திட்டத்தில் க்ளோசப் ஷாட்களில் மட்டும் தமிழ் வசனத்தைப் பேச வைத்து ஷூட் பண்ணினார்கள்.

ஆனாலும் ‘பாகுபலி’யில் தெலுங்குவாடை தூக்கலாகவே இருந்தது.

இந்தப் படத்தைப் பற்றிய ஆரம்ப பில்ட்அப்பை நம்பி 32 கோடி கொடுத்து தமிழ்ரைட்ஸை வாங்கினார் ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா.

பிறகு என்ன நினைத்தாரோ… பெரியவிலை கொடுத்துவிட்டோம்.. படம் ஓடுமா ஓடாதா என்ற பயத்தில் ‘பாகுபலி’ படத்தை 35 கோடிக்கு ராமநாராயணனின் மகன் முரளியிடம் விற்றுவிட்டார்.

முரளி தொட்டதெல்லாம் பொன்னாகும் தற்போதைய காலகட்டத்தில் ‘பாகுபலி’ படம் பெரிய வெற்றியடைந்து அவருக்கு செம வசூலைக் கொடுத்துவிட்டது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better