Search
Monday 23 April 2018
  • :
  • :

‘விஜய் 61’ படத்துக்காக உதவியாளர்களிடம் டைட்டில் கேட்ட அட்லீ

‘விஜய் 61’ படத்துக்காக உதவியாளர்களிடம் டைட்டில் கேட்ட அட்லீ

சினிமாவே சென்ட்டிமெண்ட் உலகம்தான்.

என்னதான் திறமைசாலியாக இருந்தாலும் சகுனம்… நல்ல நேரம்… கெட்ட நேரம் பார்க்காமல் திரையுலகினர் எந்த காரியத்திலும் இறங்கமாட்டார்கள்.

இதற்கு இயக்குநர் அட்லியும் விதிவிலக்கில்லை.

விஜய்யும், அட்லியும் முதன் முதலாக இணைந்த ‘தெறி’ திரைப்படம் கடந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று வெளியானது.  படம் கமர்ஷியலாக வெற்றியடைந்தது.

தெறி படத்தை தொடர்ந்து ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய்யும், அட்லியும் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர்.

‘விஜய் 61’ என தற்காலிகமாக பெயரிடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விஜய் மூன்று வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

‘தெறி’ கடந்த வருட தமிழ் புத்தாண்டன்று வெளியாகி வெற்றிபெற்றதால் தற்போது இயக்கி வரும் ‘விஜய் 61’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வருகிற தமிழ் புத்தாண்டன்று வெளியிட வேண்டும் என்று அட்லீ முடிவு செய்துள்ளாராம்.

இதற்கு விஜய்யும் ஓகே சொல்லி இருக்கிறார்.

படத்திற்கு என்ன தலைப்பு வைப்பது என்று தன்னுடைய உதவியாளர்களிடம் தலா 5 டைட்டில்களை சொல்லும்படி கேட்டிருக்கிறாராம் அட்லீ.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better