Search
Saturday 20 October 2018
  • :
  • :

மூன்று கெட்-அப்களில் அசோக் செல்வன்…. நடிப்பு வருமா?

மூன்று கெட்-அப்களில் அசோக் செல்வன்…. நடிப்பு வருமா?

சூர்யாவுக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்துக் கொண்டு மீடியாக்களுக்கு எதிராக ட்விட்டரில் கருத்து தெரிவித்தார் அசோக்செல்வன்.

அவர் நடித்த ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்துக்கு மீடியாக்களின் சப்போர்ட் கிடைக்கவில்லை.

அது மட்டுமல்ல மீடியாக்கள் மத்தியில் அசோக்செல்வன் மீது கடும் அதிருப்தி இருப்பதை தெரிந்து தயாரிப்பாளர்கள் யாரும் அவரது பக்கமே போகவில்லை.

அதையும் மீறி அசோக் செல்வனை வைத்து ‘ஹவுஸ் ஓனர்’ என்ற படத்தை இயக்க ஆரம்பித்தார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

பைனான்ஸ் பிரச்சனை காரணமாக அந்தப் படம் அப்படியே முடங்கிப்போனது.

இதனால் அப்செட்டான அசோக்செல்வன் தனக்கு நெருக்கமானவட்டாரத்தில் வாய்ப்பு தேடும் படலத்தில் ஈடுபட்டார்.

அதற்கு பலன் கிடைத்திருக்கிறது. ‘மெட்ரோ’ என்ற படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷணன் இயக்கும் அடுத்தப்படத்தில் அசோக் செல்வனுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்தப்படத்தை ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு ‘ஆக்சிஜன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் மூன்று கெட்-அப்களில் நடிக்கிறாராம் அசோக் செல்வன்!

எத்தனை கெட்அப்பில் நடித்தால் என்ன? நடிப்பு வரணுமே?




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better