Search
Monday 24 September 2018
  • :
  • :

இயக்குநராகும் அரவிந்த்சாமி…

இயக்குநராகும் அரவிந்த்சாமி…

நடிகர்கள் இயக்குநராவது புதிய விஷயமில்லை. இந்தப்பட்டியலில் விரைவில் இன்னொரு நடிகரும் இணைகிறார். அவர் வேறு யாருமல்ல… நடிகர் அரவிந்த்சாமிதான்.

வருகிற வெள்ளிக்கிழமை அரவிந்த் சாமி நடிப்பில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் ரிலீஸாக இருக்கிறது.

மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளியான ‘பாஸ்கர் த ராஸ்கல்’ மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படத்தை மலையாளத்தில் இயக்கிய சித்திக்கே இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார்.

கடந்த வாரம் வெளியாகவிருந்த இந்தப்படம் தியேட்டர்கள் கிடைக்காததிகால் இந்த வாரம் திரைக்கு வருகிறது.

தற்போது ‘சதுரங்க வேட்டை 2’, ‘நரகாசூரன்’, ‘வணங்காமுடி’, ‘செக்கச் சிவந்த வானம்’ என நான்கு படங்களில் நடித்து வருகிறார் அரவிந்த்சாமி.

இந்தப்படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டநிலையில், ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் ஆசையாம்.

அதை நிறைவேற்றும் முயற்சியில் தற்போது இறங்கியிருக்கும் அரவிந்த் சாமி தற்போது திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கிறார்.

இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

அந்தப்படத்தை அரவிந்த்சாமியே தயாரிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better