Search
Thursday 13 December 2018
  • :
  • :

அரவிந்த் கெஜ்ரிவால் உடன் சந்திப்பு… ஆம் ஆத்மி கட்சியில் கமல்ஹாசன்?

அரவிந்த் கெஜ்ரிவால் உடன் சந்திப்பு… ஆம் ஆத்மி கட்சியில்  கமல்ஹாசன்?

கே.பாலசந்தரின் மறைவுக்கும், அவரது பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்ட நிகழ்ச்சிக்கும் வர இயலாத அளவுக்கு பிஸியாக இருந்த கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக சற்று ரிலாக்ஸாக இருக்கிறார்கள் போலிருக்கிறது.

பெங்களூரில் ஸ்ரீ ரவிசங்கர் சாமியாரை சந்தித்துள்ள கமல், அப்படியே டெல்லிக்குச் சென்றார்.

அங்கே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியையும் சந்தித்த கமல், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்துப் பேசி உள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவாலை கமல்ஹாசன் சந்தித்து ஏன்?

ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து தமிழகத்தலைவராகப் போகிறாரா என்று பதறாதீர்கள்.

டெல்லியில் சினிமா படப்பிடிப்புக்கான வசதிகளை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கெஜ்ரிவாலிடம் கேட்டுக் கொள்ளவே அவரை சந்தித்திருக்கிறார் கமல்ஹாசன் .

டெல்லி அரசு தலைமைச் செயலகத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்த கமல்ஹாசன், தலைநகரின் முக்கியப் பகுதிகளில் சினிமா படப்படிப்புக்கான வாய்ப்புகளை எளிமையாக்கி அதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருவது, திரைப்படத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினாராம்.

இந்தச் சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடைபெற்றதாக தகவல்.

கமல்ஹாசனின் கோரிக்கைக்கு கெஜ்ரிவாலின் பதில் என்ன?

“முக்கிய தொழில் துறையாக திரைப்படத் துறை விளங்குவதால், தலைநகரில் அதிக அளவில் திரைப்படப் படப்பிடிப்புகள் நடைபெற வேண்டும். தலைநகரில் ஒரு திரைப்பட நகரத்தை உருவாக்கத் திட்டமிட்டு வருகிறோம்.

திரைப்படப் படப்பிடிப்புகள் நடைபெறுவதை எளிதாக்கும் வகையில், இந்தத் துறைக்கென திரைப்படத் துறை வல்லுநர்கள் தலைமையிலான தனி அமைப்பையும் ஏற்படுத்தத் திட்டமிட்டு வருகிறோம்” என்றாராம்.

இதையடுத்து, திரைப்படத் தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்துவதன் அவசியம் குறித்தும் கெஜ்ரிவாலிடம் கமல்ஹாசன் விளக்கி இருக்கிறார்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better