Search
Wednesday 12 December 2018
  • :
  • :

சென்ட்டிமெண்ட் பற்றி கவலைப்படாத சன் பிக்சர்ஸ்

சென்ட்டிமெண்ட் பற்றி கவலைப்படாத சன் பிக்சர்ஸ்

‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

125 கோடியில் தயாராக உள்ள இந்த படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

‘மெர்சல்’ படத்திற்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மானே இந்தப்படத்திற்கும் இசை அமைக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது பற்றி அதிகாரபூர்வமற்றமுறையில் தகவல்கள் வெளியானநிலையில் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை அமைப்பாளர் என்ற தகவலை தற்போது ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

‘உதயா’, ‘அழகிய தமிழ் மகன்’, ‘மெர்சல்’ ஆகிய படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானும் விஜய்யும் இணையும் நான்காவது படம் இது.

இதில் என்ன வேடிக்கை தெரியுமா? ஏ.ஆர்.ரஹ்மானும் விஜய்யும் இணைந்த ‘உதயா’, ‘அழகிய தமிழ் மகன்’, ‘மெர்சல்’ ஆகிய மூன்று படங்களுமே வணிகரீதியில் பெரிய வெற்றியைப்பெறவில்லை.

இந்த சென்ட்டிமெண்ட் சுட்டிக்காட்டப்பட்டபோது அதை அலட்சியப்படுத்திவிட்டதாம் சன் பிக்சர்ஸ். நல்ல விஷயம்தான்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better