Search
Wednesday 23 May 2018
  • :
  • :

இளையராஜா சாதனையை முறியடித்த ஏ.ஆர்.ரஹ்மான்…

இளையராஜா சாதனையை முறியடித்த ஏ.ஆர்.ரஹ்மான்…

65வது தேசிய திரைப்பட விருது பெறவிருக்கும் திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆஸ்கர் விருது விழாவில் ஒரே நேரத்தில் இரண்டு விருதுகளைக் கைப்பற்றியதைப்போல் தற்போது முதல்முறையாக ஒரே நேரத்தில் இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்,.

‘மாம்’ என்ற ஹிந்தி படத்திற்கு இசையமைத்ததற்காக சிறந்த பின்னணி இசைக்காகவும், காற்று வெளியிடை படத்திற்காக சிறந்த இசையமைப்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்திய அளவில் ‘சிறந்த இசையமைப்பாளர்’ பிரிவில் அதிக விருதுகளை பெற்றவராக இதுவரை இளையராஜாவே இருக்கிறார்.

அவர் இதுவரை மொத்தம் ஐந்து முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

ரோஜா, மின்சாரக்கனவு, லகான், கன்னத்தில் முத்தமிட்டால் படங்களுக்காக ஏற்கனவே நான்கு தேசிய விருதுகளை பெற்றுள்ள ஏ.ஆர். ரஹ்மான் தற்போது பெறவிருக்கும் இரண்டு விருதுகளையும் சேர்த்து மொத்தம் 6 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

இதன் மூலம், இளையராஜாவின் சாதனையை முறியடித்துள்ளார் ரஹ்மான்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better