Search
Thursday 24 January 2019
  • :
  • :

சிவகார்த்திகேயன் படத்துக்கு அதிக சம்பளம் கேட்ட அனிருத்

சிவகார்த்திகேயன் படத்துக்கு அதிக சம்பளம் கேட்ட அனிருத்

சிவகார்த்திகேயன் நடித்த ‘சீமராஜா’ படம் விரைவில் ரிலீஸாக உள்ளநிலையில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படமும், ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படமும் நடித்து வருகிறார்.

எம்.ராஜேஷ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இந்த படத்திற்கு யார் இசை அமைப்பாளர் என்பது குறித்து இதுவரை தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் இப்படத்திற்கு ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைக்க இருக்கிறார் என்ற அதிகாரபூர்வ தகவலை நேற்று வெளியிட்டனர்.

ஏற்கெனவே சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர்நீச்சல்’ படத்தின் டைட்டில் பாடலைப் பாடிய ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இப்போது இந்தப் படத்தின் மூலம் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார்.

இந்தப்படத்துக்கு அனிருத்தைத்தான் இசையமைப்பாளராக்க முதலில் திட்டமிட்டுள்ளனர். அவர் மிகப்பெரிய சம்பளம் கேட்டதால் அவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் தயாரிப்பாளர் ‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ. ஞானவேல்ராஜா. அதன் பிறகே ஆதியை கமிட் பண்ணியுள்ளனர். அனிருத் கேட்ட சம்பளத்தில் கால்வாரி சம்பளம்தான் ஆதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better