Search
Friday 20 July 2018
  • :
  • :

அயல் நாட்டில் இசை நிகழ்ச்சி… அலைபாயும் அனிருத்…

அயல் நாட்டில் இசை நிகழ்ச்சி… அலைபாயும் அனிருத்…

இசையமைப்பாளர் அனிருத்துக்கு படங்களுக்கு இசையமைத்து போரடித்துவிட்டதாம்.

வெளிநாடுகளில் லைவ்வாக இசைநிகழ்ச்சி நடத்துவதில்தான் ஆர்வமாக இருக்கிறாராம்.

தனுஷ் நடித்த தங்கமகன் படத்துக்கு இசையமைத்துக் கொண்டிருந்தபோது, படத்துக்கான பாடல்களைத் தராமல் கனடா இசைநிகழ்ச்சிக்காக இசைப்பணி செய்ய ஆரம்பித்தார்.

இது தொடர்பான வாக்குவாதம் முற்றிய நிலையில்தான் தனுஷும் அனிருத்தும் பிரிந்தனர்.

அதன் பிறகு வேலைக்காரன் படத்துக்கு இசையமைத்தபோதும் வெளிநாட்டு இசைநிகழ்ச்சிக்காக மெனக்கெட ஆரம்பித்தார்.

அதனால் கருத்தவன் எல்லாம் கலீஜா பாடலை குறித்த நேரத்தில் கொடுக்காமல்போனதால் படப்பிடிப்பே கேன்சலானது.

இந்நிலையில் ஜூன் மாதம் 16 மற்றும் 17ஆம் தேதிகளில், லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார் அனிருத்.

ஜூன் 16 ஆம் தேதி லண்டனில் உள்ள எஸ்எஸ்இ வெம்ப்ளி அரேனா என்ற இடத்திலும், 17ஆம் தேதி பாரீஸில் உள்ள ஜெனித் என்ற இடத்திலும் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார் அனிருத்.

இதுவரை இந்த இடத்தில் ஒரு தமிழ்க் கலைஞர் கூட இசை நிகழ்ச்சி நடத்தியது கிடையாது. அனிருத் தான் முதன்முதலாக இங்கு இசை நிகழ்ச்சி நடத்தப் போகிறார்.

எனவே தற்போது இதற்கான இசைப்பணிகளை தொடங்கிவிட்டார் அனிருத்.

இதனால் கார்த்திக்சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் இசை தாமதமாகுமா?




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better