Search
Saturday 20 October 2018
  • :
  • :

அனிருத்தால் தாமதமான இசைவெளியீடு

அனிருத்தால் தாமதமான இசைவெளியீடு

கே.இ.ஞானவேல்ராஜாவின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ பொங்கல் வெளியீடாக இம்மாதம் 12-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

அனிருத் இசை அமைக்கும் இந்த படத்தின் பாடல்கள் இன்று வெளியாவதாக இருந்தது.

ஆனால் திடீரென இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டை ஒரு நாள் தள்ளி வைத்திருக்கிறார்கள்.
தள்ளி வைப்புக்கு என்ன காரணம்?

வேறு யார்? அனிருத்தின் ஆமைவேகம்தான் காரணம்.

இன்று பாடல் வெளியீடு என்பதை பல நாட்களுக்கு முன்பே அவரிடம் தெரியப்படுத்திய பிறகும் குறித்த நேரத்தில் பாடலின் ஃபைனல் அவுட்புட் ரெடியாகவில்லை. சிம்பு உடன் வேறு ஒரு பணியில் இருந்ததால் தானா சேர்ந்த கூட்டம் பணியை செய்துமுடிக்கவில்லையாம்.

இதனால் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் படத்தின் நாயகனான சூர்யாவும் அப்செட்டாகியுள்ளனர்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better