Search
Tuesday 24 April 2018
  • :
  • :

அடுத்த மாதம் தொடங்கும் அஜீத்தின் புதிய படம்

அடுத்த மாதம் தொடங்கும் அஜீத்தின் புதிய படம்

‘விவேகம்’ படத்தை தொடர்ந்து அஜித் அடுத்து நடிக்கும் படத்தையும் சிவாவே இயக்குகிறார் என்று கடந்த சில வாரமாகவே செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தது.

இந்த செய்திகள் ஏறக்குறைய தற்போது உறுதியாகிக் கொண்டிருக்கிறது.

அஜித்குமாரின் 58-ஆவது படமாக உருவாகவிருக்கும் இந்தப்படத்தையும் ‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

விவேகம் படத்தினால் விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் சுமார் 30 கோடி நஷ்டமடைந்துள்ளனர்.

அந்தப் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமும் 25 கோடிக்கு மேல் பணத்தை இழந்துள்ளது.

இந்த நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காகவே சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு மீண்டும் கால்ஷீட் கொடுத்தள்ளார் அஜித்.

ஆனால் சம்பளத்தை குறைத்துக் கொள்ளவில்லை. விவேகம் படத்துக்கு வாங்கிய அதே 35 கோடி சம்பளம்தான் புதிய படத்துக்கும் வாங்குகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

அட்வான்ஸ் 15 கோடி, படத்தை முடித்த பிறகு 20 கோடி என்ற டேர்ம்ஸில் அக்ரிமெண்ட் தயாராகிவருகிறதாம்.

அஜித்தும் சிவாவும் நான்காவது முறையாக இணையும் இந்தப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

விவேகம் படத்தில் அனிருத்தின் இசை எடுபடாதது மட்டுமல்ல, படத்தின் தோல்விக்கும் காரணமானது.

எனவே அனிருத் வேண்டாம் என அஜித்தே சொல்லிவிட்டாராம்.

டிசம்பர் மாதம் தொடங்கும் இப்படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளனர்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better