Search
Thursday 16 August 2018
  • :
  • :

தல 57 பில்லாவா? பில்லா-2வா?

தல 57 பில்லாவா? பில்லா-2வா?

தல அஜீத்தை நரைத்த தல அஜீத்தாக மாற்றியதில் இயக்குநர் சிவாவுக்கு பெரும் பங்கு உண்டு.

மங்காத்தா படத்தில் சால்ட் பெப்பர் லுக்கில் தலைகாட்டிய அஜீத்தை வீரம் படத்தில் முழுமையான நரையுடன் காட்டினார்.

வேதாளம் படத்திலும் அதே நரைமுடியுடன் காட்டினார் சிவா.

எனவே வீரம், வேதாளம் படத்தைத் தொடர்ந்து, அஜித்துடன் இயக்குநர் சிவா மீண்டும் இணைந்திருக்கும் ‘தல 57’ படத்தில் அஜித்தின் கெட்டப் எப்படி இருக்கும் என்ற கேள்வி அஜித் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதற்கான விடை தற்போது தெரிய வந்திருக்கிறது.

‘தல 57’ படத்தை ஸ்டைலிஷ் கேங்ஸ்டர் படமாக எடுக்க சிவா திட்டமிட்டு அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறாராம்.

கேங்ஸ்டர் படம் என்பதால் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை வெளிநாடுகளில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

அஜித் நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான ‘பில்லா’ படமும் முழுக்க முழுக்க வெளிநாடுகளில்தான் எடுக்கப்பட்டது.

அந்த சென்ட்டிமெண்ட் காரணமாகவோ என்னவோ தல 57 படத்தையும் வெளிநாட்டில் எடுக்க இருக்கிறார்களாம்.

பில்லா 2  படம் கூட வெளிநாட்டில்தான் எடுக்கப்பட்டது என்பதை எப்படி மறந்தார்கள்?




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better