Search
Sunday 24 June 2018
  • :
  • :

காதலருக்கு 25 லட்சம் மொய் எழுதிய நயன்தாரா…!

காதலருக்கு 25 லட்சம் மொய் எழுதிய நயன்தாரா…!

சிம்புவை வைத்து ‘போடாபோடி’ என்ற தோல்விப்படத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன்.

முதல் படம் தோல்வியடைந்ததினால் பல வருடங்களாக பட வாய்ப்பில்லாமல் இருந்த விக்னேஷ்சிவனுக்கு ‘நானும் ரௌடிதான்’ என்ற படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் நடிகர் தனுஷ்.

விஜய்சேதுபதி ஹீரோவாக நடித்த அந்தப் படத்துக்கு நயன்தாராதான் கதாநாயகியாக வேண்டும் என்று விக்னேஷ் சிவன் கேட்டதால், நயனுக்கு பெரும் சம்பளம் கொடுத்து புக் பண்ணினார் தனுஷ்.

‘நானும் ரௌடிதான்’ படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டது.

காதல் மயக்கத்தில் படப்பிடிப்பில் கவனம் செலுத்த மறந்தார் விக்னேஷ் சிவன்.

அதனால் ‘நானும் ரௌடிதான்’ படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடியவில்லை. வேலை இழுத்துக்கொண்டே போனது.

50 நாட்களில் படப்பிடிப்பை முடித்துத்தருவதாக சொன்ன விக்னேஷ் சிவன், 75 நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்.

அப்படியும் படம் முடியவில்லை.

மேலும் 5 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று விக்னேஷ் சிவன் சொல்ல, அதுவரை பொறுமையாக இருந்த தனுஷ் பொங்கிவிட்டாராம்.

நீயும் நயன்தாராவும் லவ் பண்ண என்னுடைய பணம்தான் கிடைத்ததா? நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது. இனி ஒரு பைசா தர மாட்டேன். எனக்கு நீ படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று கறாக சொல்லிவிட்டாராம்.

தனுஷ் இப்படி சீறுவார் என எதிர்பார்க்காத விக்னேஷ் சிவன் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்.

இந்த விஷயம் நயன்தாராவுக்கு தெரிந்ததும், ‘நானும் ரௌடிதான்’ படத்தின் கடைசி 5 நாட்கள் படப்பிடிப்பை தானே செலவு செய்து நடத்தினாராம்.

ஒரு நாளைக்கு ஐந்து லட்சம் வீதம் 5 நாட்களுக்கு 25 லட்சம் செலவு செய்திருக்கிறார் நயன்தாரா.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better