Search
Sunday 21 October 2018
  • :
  • :

நயன்தாரா மானேஜருக்கு  65 கோடி டார்கெட்…

நயன்தாரா மானேஜருக்கு  65 கோடி டார்கெட்…

விவேகம் படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இரண்டாவது முறையாக அஜித் நடிக்கும் படம் ‘விஸ்வாசம்’.

நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் இது.

நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில்  தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரமேஷ் திலக் என ஏகப்பட்ட காமெடியன்கள் நடிக்கின்றனர்.

கடந்த சில வாரங்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளனர் ‘விஸ்வாசம்’ படக்குழுவினர்.

இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புகாக விரைவில் மும்பை செல்லவிருக்கின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க, ‘விஸ்வாசம்’ படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் இப்படத்தின் வியாபாரம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.

‘விஸ்வாசம்’ படத்தின் தமிழக விநியோக உரிமையை, நயன்தாராவின் மானேஜரும், நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ பிரபு தேவா நடிப்பில் வெளியான ‘குலேபகாவலி’ படங்களை தயாரித்தவருமான கோட்டபடி ராஜேஷ் வாங்கியுள்ளார்.

47 கோடி ரூபாய்க்கு  தமிழக விநியோக உரிமையை வாங்கியுள்ளார்.

ஏரியாவாரியாக பிரித்து குறைந்தபட்சம் 65 கோடிக்கு பிசினஸ் செய்ய வேண்டும் அவருக்கு அஜித் தரப்பிலிருந்து சொல்லப்பட்டுள்ளது. இத்ந டீலை ராஜேஷ் வெற்றிகரமாக செய்துமுடித்தால் அஜித்தின் அடுத்தப்படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

அது என்ன 65 கோடி இலக்கு?

விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் தமிழக விநியோக உரிமை 65 கோடிக்குத்தான் விற்கப்பட்டிருக்கிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better