Search
Sunday 23 September 2018
  • :
  • :

2 பாயிண்ட் O டீசர் வரும் செப்டம்பர் 13 ரிலீஸ்…

2 பாயிண்ட் O டீசர் வரும் செப்டம்பர் 13 ரிலீஸ்…

சுபாஸ்கரன் வழங்கும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அனைவரும் எதிர்பார்க்கும் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் 2 பாயிண்ட் O டீசர் வரும் செப்டம்பர் 13 விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.

ரஜினிகாந்த், அக்ஷய் குமார், நடித்துள்ள 2 பாயிண்ட் O படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹமான்.

இந்தியா மற்றும் வெளிநாடுகிளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 3D திரையரங்குகளில் 3D தொழில்நுட்பத்தில் டீசர் திரையிடப்படவுள்ளது.

அதிபிரம்மாண்டமான 2 பாயிண்ட் O படத்தின் டீசரை நீங்கள் 3D யில் பார்ப்பதற்காக கடின உழைப்பு போடப்பட்டு வருகிறது.

இப்படத்தின் டீசரை நீங்கள் 3D யில் பார்ப்பது உங்களுக்கு புதிய மற்றும் மகத்தான அனுபவமாக இருக்கும்.

இந்தியா மற்றும் வெளிநாடுகிளில் உள்ள எந்தெந்த திரையரங்குகளில் 2 பாயிண்ட் O டீசர் 3D தொழில்நுட்பத்தில் வெளியாகும் என்ற விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

3D யில் வெளியாகும் அதே நேரத்தில், யூடுபிலும், 2D திரையரங்குகளில் 2D தொழில்நுட்பத்திலும் 2 பாயிண்ட் O டீசர் திரையிடப்படவுள்ளது.

இன்னும் 4 தினங்களில் புதிய பரிணாமத்தில் 2 பாயிண்ட் O படத்தின் டீசரை ரசிக்க தயாராகுங்கள்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better