Search
Wednesday 17 October 2018
  • :
  • :

பாகுபலி- 2 சண்டைப்பயிற்சியாளர் யார்?

பாகுபலி- 2 சண்டைப்பயிற்சியாளர் யார்?

டெல்லியில் அறிவிக்கப்பட்ட 65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பில், எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி 2’ படத்துக்கு மூன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிரபாஸ், ராணா டகுபதி, ஹீரோக்களாக நடித்த இந்தப்படத்தில் அனுஷ்கா, தமன்னா இருவரும் கதாநாயகிகளாக நடித்தனர்.

மற்றும் ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், ரோகிணி, நாசர் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ள பாகுபலி- 2. ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது.

இந்தப் படம், 100 நாட்களைக் கடந்து ஜப்பானில் திரையிடப்பட்டு வருகிறது.

தற்போது அறிவிக்கப்பட்ட தேசியவிருது பட்டியலில், சிறந்த வெகுஜனப்படம், சிறந்த சண்டைப் பயிற்சி இயக்குநர், சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் என மூன்று விருதுகள் பாகுபலி-2 படத்துக்குக் கிடைத்துள்ளன.

இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படத்தின் சண்டைப்பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன். ஆனால் தேசிய விருதோ அப்பாஸ் அலி மொகுல் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கும் பாகுபலி- 2 படத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது தேர்வுக்குழுவுக்கு தெரியாமல்போனதுதான் வியப்பான விஷயம்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better