Search
Monday 17 December 2018
  • :
  • :

செப்டம்பர்-13 அன்று 2.0 படத்தின் த்ரீடி டீஸர்…

செப்டம்பர்-13 அன்று 2.0 படத்தின் த்ரீடி டீஸர்…

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், நடிக்கும் படம் ‘2.0’.

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

2.0 படம் உலகம் முழுக்க நவம்பர் 29-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ‘2.0’ படத்தின் டீஸர் விநாயகசதுர்த்தி அதாவது செப்டம்பர்-13 அன்று வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இதன்காரணமாக ரஜினி ரசிகர்களுக்கு விநாயகசதுர்த்தி மகிழ்ச்சியை தரும் தினமாக மாறி இருக்கிறது.

2.0 படத்தின் டீஸர் ‘3டி’ தொழில்நுட்பத்தில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது!

வழக்கமாக யூடியூபில்தான் டீஸரை வெளியிடுவார்கள்.

அதில் 3டி தொழில்நுட்பத்தில் எப்படி வெளியிட முடியும்? ஒருவேளை கண்ணாடி இல்லாமல் 3டியில் பார்ப்பதுபோல் டீஸரை உருவாக்கியிருக்கிறார்களா? அல்லது தியேட்டர்களில் மட்டும் ‘2.0’ படத்தின் டீஸரை வெளியிடப்போகிறார்களா என்பது குறித்து தகவல் இல்லை.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better