Search
Tuesday 24 April 2018
  • :
  • :

’24’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது…!

’24’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது…!

தமிழில் சிம்பு நடித்த ‘அலை’, மாதவன் நடித்த ‘யாவரும் நலம்’ ஆகிய படங்களை இயக்கியவர் விக்ரம் குமார்.

சமீபத்தில் தெலுங்கில் இவர் இயக்கிய ‘மனம்’ என்ற படம் சூப்பர் ஹிட்டானது.

அதனை தொடர்ந்து விக்ரம் குமார் தமிழில் இயக்கி வரும் மூன்றாவது படம் ‘24’.

சூர்யா நடிக்கும் ‘24’ படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

’24’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் மும்பையில் தொடங்கி அங்கேயே பல நாட்கள் நடைபெற்றன.

பின்னர் ஆந்திராவில் சில இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் பாடல் காட்சிக்காக போலந்து சென்றனர்.

தற்போது அனைத்து படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது.

இந்த தகவலை நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

போலந்து நாட்டில் நடைபெற்ற இப்படத்தின் கடைசி இரண்டு பாடல் காட்சிகளில் மகிழ்ச்சியாக நடித்து முடித்தது குறித்து இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து சூர்யாவும் ட்வீட் செய்துள்ளார்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better